கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.

இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 11, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 174 ரன்களைச் சேர்த்த நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 33.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது.
2. மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கியுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், எதிர்வரும் யுபிடி20 லீக் தொடரில் விளையாட உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் தடைவிதித்துள்ளது. மேலும் யாஷ் தயாள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் அவர் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
3. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தனது ஆல் டைம் சிறந்த ஐந்து டெஸ்ட் பேட்டர்களைத் தேர்வு செய்துள்ளார். இதில் அவர் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள நிலையில், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜாக் காலிஸ், குமார் சங்கக்காரா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
4. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ஐசிசி தொடருக்கான கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மிதாலி ராஜ், யுவராஜ் சிங் மற்றும் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் பங்கேற்றனர்.
Also Read: LIVE Cricket Score
5. தி ஹண்ட்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் பர்மிங்ஹாம் லண்டன் ஸ்பிரித் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட பந்துகளின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய லண்டன் ஸ்பிரிட் அணி 98 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now