
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இபோட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்ட்டிக்கான இலங்கை அணியில் குசால் பெரெராவும், வங்கதேச அணியில் தன்ஸிம் ஷாகிப்பும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை: பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, கசுன் ராஜித, தில்ஷன் மதுஷங்கா.
வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, ஷகிப் அல் ஹசன்(கே), தாஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், தன்ஸிம் ஹசன் ஷாகிப், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம்.