இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றிலிருந்து இருந்து இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் இந்திய மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளன.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்புவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முன்னணி வீரர்களான விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரஷித் கிருஷ்னா, முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா: ரோஹித் சர்மா(கே), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரஷித் கிருஷ்ணா.
வங்கதேசம்: லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன்(கே), தாஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், நசும் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.