இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் கடைசி போட்டியானது இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய மகளிர் பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா (கே), உமா செத்ரி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரக்வி பிஸ்ட், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், சஜீவன் சஜனா, ராதா யாதவ், சைமா தாக்கூர், டைட்டாஸ் சாது, ரேணுகா தாக்கூர் சிங்
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் பிளேயிங் லெவன்: ஹீலி மேத்யூஸ்(மே), கியானா ஜோசப், ஷெமைன் காம்ப்பெல், டியாண்ட்ரா டோட்டின், சினெல்லே ஹென்றி, நெரிசா க்ராப்டன், ஆலியா அலீன், ஷபிகா கஜ்னாபி, ஜைதா ஜேம்ஸ், அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக்