
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிட்செல் சண்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இதில் இரு அணிக்கும் வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது.இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், கர்ண் சர்மா, யாஷ் தயாள், லோக்கி ஃபெர்குசன், முகமது சிராஜ்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கே), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா.