
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் குயின்டன் டி காக் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர், ரொமாரியோ செய்ஃபெர்ட், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் இடம்கிடைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன்(w), நமன் திர், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், ஹர்திக் பாண்டியா(கே), நெஹால் வதேரா, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அன்ஷுல் கம்போஜ், பியூஷ் சாவ்லா, அர்ஜுன் டெண்டுல்கர், நுவான் துஷாரா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல்(கே), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, அர்ஷத் கான், மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்.