
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெறவுள்ளது. நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இரு அணிகளும் இத்தொடரை பயன்படுத்தவுள்ளன.
அதன்படி நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ்(கே), கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா, ஜோஷ் ஹசில்வுட்
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், மிட்செல் சான்ட்னர்(கே), ஆடம் மில்னே, இஷ் சோதி, டிம் சௌதீ, லோக்கி ஃபெர்குசன்