
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நேப்பியரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
நியூசிலாந்து: டிம் செய்ஃப்ர்ட், ஃபின் ஆலன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர்(கே), ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, பென் சியர்ஸ்
வங்கதேசம்: சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), ரோனி தாலுக்தார், தவ்ஹித் ஹ்ரிடோய், முஸ்தஃபிசூர் ரஹ்மான், அஃபிஃப் ஹொசைன், மஹேதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப், ஷோரிஃபுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன்.