
New Zealand vs Australia T20I 2025: நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் மிட்செல் சாண்ட்னர், வில்லியம் ஓ ரூர்க், கிளென் பிலீப்ஸ், ஃபின் ஆலன் உள்ளிட்டோர் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸுடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள்லும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் இந்த தொடர்களுக்கு முன்னதாக நியூசிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி வில்லியம் ஓ'ரூர்க், கிளென் பிலிப்ஸ் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகியுள்ளனர். இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் வில்லியம் ஓ'ரூர்க்கின் கீழ் முதுகில் ஏற்பட்ட எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.