
Netherlands Squad For Bangladesh Tour: வங்கதேச தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக, நெதர்லாந்து அணி முதல் முறையாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.