2-lg.jpg)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியிம் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா : ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி.
இந்தியா : கே.எல்.ராகுல்(கே), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.