
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று செயிண்ட் ஜார்ஜிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஒரு மாற்றமும் செய்துள்ளன.
இங்கிலாந்து : பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர்(கே), வில் ஜாக்ஸ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஆதில் ரஷித், கஸ் அட்கின்சன், டைமல் மில்ஸ், ரீஸ் டாப்லி
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல்(கே), ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோட்டி, அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோஸப்.