-lg.jpg)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொனணட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறுகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியில் நந்த்ரே பர்கர், டேவிட் பெடிங்ஹாம் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா: ரோஹித் சர்மா(கேட்ச்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டெம்பா பவுமா(கே), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்.