
Travis Head Record: ஆஸ்திரேலியாவுக்காக 50 ஓவர் வடிவத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களின் சிறப்பு சாதனை பட்டியலில் டிராவிஸ் ஹெட் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்,
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ், தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் சதமடித்து, அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டேவால்ட் ப்ரீவிஸ் 49 ரன்கள் அடித்தார்.இதன்மூலம் 276 ரன்கள் வித்தியசாத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.