மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உல்கக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்ட்னாக ஃபாத்திமா சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போதே இனி இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்ற அறிவிப்பையும் பிசிபி வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றனர். முன்னதாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்திருந்தது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் மகளிர் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக ஃபாத்திமா சனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக பேட்டர் ஹெய்மன் ஃபாத்திமாவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நடாலியா பர்வைஸ் (8 ஒருநாள் போட்டிகள், 24 டி20ஐ), ரமீன் ஷமிம் (8 ஒருநாள் போட்டிகள், 11 டி20ஐ), சதாஃப் ஷமாஸ் (15 ஒருநாள் போட்டிகள், 12 டி20ஐ), சாதியா இக்பால் (27 ஒருநாள் போட்டிகள், 50 டி20ஐ), ஷவால் சுல்ஃபிகர் (3 ஒருநாள் போட்டிகள், 9 டி20ஐ) மற்றும் சையதா அரூப் ஷா (2 ஒருநாள் போட்டிகள், 15 டி20ஐ) ஆகியோர் தங்கள் முதல் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மகளிர் அணி: பாத்திமா சனா (கேப்டன்), முனீபா அலி சித்திக் (துணை கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், எய்மான் பாத்திமா, நஷ்ரா சுந்து, நடாலியா பர்வைஸ், ஒமைமா சோஹைல், ரமீன் ஷமிம், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால், ஷவால் சுல்பிகர், சித்ரா அமின், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்) மற்றும் சையதா அரூப் ஷா
Also Read: LIVE Cricket Score
ரிஸர்வ் வீரர்கள்: குல் பெரோசா, நஜிஹா அல்வி, துபா ஹாசன், உம்-இ-ஹானி, வஹீதா அக்தர்
Win Big, Make Your Cricket Tales Now