1-lg.jpg)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், லிசாத் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, நான்ட்ரே பர்கர்.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கே), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.