தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 19) கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா, டேவிட் மில்லர், ஜோர்ன் ஃபார்டுயின் மற்றும் அறிமுக வீரர் குவேனா மபாகா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். இதனால் ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஓட்னியல் பார்ட்மேன், ரபாடா ஆகியோருக்கு பிலேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதேசமயம் பகிஸ்தான் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), கம்ரான் குலாம், சல்மான் ஆகா, இர்ஃபான் கான், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டோனி டி ஸோர்ஸி, டெம்பா பவுமா(கேப்டன்), ரஸ்ஸி வான்டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, பிஜோர்ன் ஃபோர்டுயின், குவேனா மபாகா, தப்ரைஸ் ஷம்சி.