அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஈஷான் மலிங்கா - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஈஷன் மலிங்கா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் தங்களுடைய அரைசதங்களையும் பூர்த்தி செய்து அசத்தினர். இதில் மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிக்கோலஸ் பூரன் 45 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறவினர்.
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்துள்ளது. சன்ரைசர்ஸ் தரப்பில் ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மீண்டும் ஏமாற்றமாளித்தார்.
அதிலும் குறிப்பாக அவர் இஷான் மலிங்காவின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டி இழந்திருந்தார். அதன்படி இன்னிங்ஸிங் 12ஆவது ஓவரை இஷான் மலிங்கா வீசிய நிலையில் ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரிஷப் பந்த் பந்துவீச்சாளருக்கு நேராக அடிக்க முயல பந்து அவர் எதிர்பார்த்த வேகத்தில் இல்லாததால், அது பவுலரை நோக்கி சென்றது. இதனைச் சரியாக கணித்த ஈஷான் மலிங்கா அபாரமான கேட்ச்சைப் பிடித்து அசத்தினார்.
இதன் காரணமாக இப்போட்டியில் 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ரிஷப் பந்த் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழப்பது 12 இன்னிங்ஸ்களில் இது 7ஆவது முறையாகும். இதனால் அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இஷான் மலிங்கா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Magnificent Malinga!
— IndianPremierLeague (@IPL) May 19, 2025
Athleticism on display from Eshan Malinga as he grabs a stunner to send back Rishabh Pant! #LSG 133/2 after 13 overs.
Updates https://t.co/GNnZh90u7T#TATAIPL | #LSGvSRH | @SunRisers pic.twitter.com/5rSouA8Kw0
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன், wk), ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, அவேஷ் கான், வில் ஓ'ரூர்க்
இம்பேக்ட் வீரர்கள்: ஷர்துல் தாக்கூர், ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, எம் சித்தார்த், டேவிட் மில்லர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இஷான் கிஷன் (வாரம்), அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, ஜீஷன் அன்சாரி, எஷான் மலிங்கா
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: அதர்வா டைடே, முகமது ஷமி, சச்சின் பேபி, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங்
Win Big, Make Your Cricket Tales Now