ஹாரி புரூக் ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார் என்று நம்புகிறேன் - ஆதில் ரஷித்!
ஹாரி புரூக் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைவராகவும் கேப்டனாகவும் இருக்க முடியும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம் என இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் தெரிவித்துள்ளார்.
-mdl.jpg)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதியும் டி20 தொரானது ஜூன் 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ள நிலையில், நட்சத்திர ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் பில் சால்ட், லுக் வுட் மற்றும் லியாம் டௌசன் ஆகியோர் டி20 அணிக்கும், டாம் ஹாட்ர்லி ஒருநாள் அணியிலும் இடம்பிடித்துள்ளனர். மேலும் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் சாதரான வீரராக இந்த தொடரில் விளையாடவுள்ளார். அதேசமயம் டி20 அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோ ரூட், கஸ் அட்கின்சன், ஜேமி ஸ்மித் உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்கவில்லை. முன்னதாக ஜோஃப்ரா ஆர்ச்சர் இரு அணிகளிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹாரி புரூக்கின் கேப்டன்சி குறித்து பேசிய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித், “ஹாரி புரூக் கேப்டன் பொறுப்பிற்கு தயாராக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும், ஆனால் யாராவது கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்வது ஒரே இரவில் நடக்கும் விஷயமல்ல. அவருக்கு நேரம் இருக்கிறது, அவர் இதுவரை செய்ததை சிறப்பாகச் செய்துள்ளார். அவர் ஒரு சிறந்த தலைவராக இருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன், எதிர்காலத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்.
அவர் அதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதில் நிறைய யோசனைகள் சென்றுள்ளன என்பது தெளிவாகிறது. இது ஒரு பெரிய பணி, இது ஒரு பெரிய விஷயம், ஆனால் அவர் அதை அவருக்குக் கொடுத்தார், ஏனென்றால் அவர் தான் அந்தத் தலைவராக இருக்க முடியும் என்று அவர் நினைக்கிறார். மேலும் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைவராகவும் கேப்டனாகவும் இருக்க முடியும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.
தற்போதைய சூழ்நியில் அணியை சமநிலைப்படுத்துவது கடினமாக இருக்கும், ஆனால் அவர் அதைச் செய்து இங்கிலாந்தை வெற்றிகளுக்கும் உலகக் கோப்பைகளுக்கும் இட்டுச் செல்லும் திறன், மனநிலை, பசி மற்றும் உந்துதல் அவரிடம் உள்ளது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக நாங்கள் 100 சதவீதம் எதிர்நோக்கி காத்திருகிறேன். புதிய கேப்டன் மற்றும் புதிய முகங்களுடன் இங்கிலாந்து கிரிக்கெட்டின் புதிய சகாப்தம் இது” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், ஜோ ரூட், ஜேமி ஸ்மித்.
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து டி20 அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், லியாம் டௌசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், லூக் வுட்.
Win Big, Make Your Cricket Tales Now