
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.
க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஜோர்டான் ஹெர்மன், டேவிட் மாலன், டாம் ஆபெல், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சென், லியாம் டௌசன், சைமன் ஹார்மர், ஓட்னியல் பார்ட்மேன், டேனியல் வோரால்.
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்: பிலிப் சால்ட், வில் ஜேக்ஸ், கைல் வெர்ரைன், ரைலீ ரூஸோவ், கொலின் இங்க்ராம், ஜேம்ஸ் நீஷம், செனுரன் முத்துசாமி, வெய்ன் பார்னெல்(கே), ஈதன் போஷ், ஆதில் ரஷித், டேரின் டுபாவில்லன்.