இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 56 ரன்களும் கேப்டன் பாபர் அஸாம் 158 ரன்களும் முகமது ரிஸ்வான் 74 ரன்களும் எடுத்ததால், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 5 விக்கெட்டுகளும் சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
கடினமான இலக்கை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, 165 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்களும் பின்வரிசை வீரர் லூயிஸ் கிரேகோரி 77 ரன்களும் எடுத்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார்கள். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 48 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்து அபாரமான வெற்றியை அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் மூன்றாவது ஒருநாள் போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி..!