Advertisement

ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 18, 2025 • 03:06 PM

Gujarat Titans vs Delhi Capitals Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 18, 2025 • 03:06 PM

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் குஜராத் அணி அதிர்ச்சி தோல்விக்கு பிறகும், டெல்லி அணி த்ரில் வெற்றிக்கு பிறகும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Also Read

GT vs DC Match Details

  • மோதும் அணிகள்- குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் -  நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - ஏப்ரல் 19, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

Narendra Modi Stadium, Ahmedabad Stadium Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 35ஆவது போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 4 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 160 ரன்களாக உள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரிலும் இங்கு நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பெற்றுளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

GT vs DC: Where to Watch?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

GT vs DC Head To Head Record

  • மொத்தம் - 05
  • டெல்லி கேபில்ஸ் – 03
  • குஜராத் டைட்டன்ஸ் - 02

GT vs DC Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- ஜோஸ் பட்லர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - ஷுப்மான் கில், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, சாய் சுதர்சன் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர் - அக்சர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான்.

GT vs DC Predicted Playing 11

Gujarat Titans XI: சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இம்பாக்ட் வீரர் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்.

Delhi Capitals XI: ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்/ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் ஷர்மா, விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா.

இம்பேக்ட் வீரர் - முகேஷ் குமார்.

GT vs DC Dream11 Prediction, GT vs DC, GT vs DC Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, GT vs DC Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Gujarat Titans vs Delhi Capitals

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement