ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகிய முஷ்பிக்கூர் ரஹீம்!
-lg.jpg)
Mushfiqur Rahim To Miss Remainder Of Zimbabwe Series
வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டெஸ்ட் போட்டியை 220 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றிய வங்கதேச அணி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வெல்லும் முனைப்போடு களமிறங்கவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான முஷ்பிக்கூர் ரஹிம் குடும்ப காரணங்களுக்காக ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது.
இதையடுத்து அவர் விரைவில் வங்கதேசம் திரும்ப வரவுள்ளார் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தகவலளித்துள்ளது. முன்னதாக ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரிலிருந்து விலகுவதாக முஷ்பிக்கூர் ரஹீம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News