
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் குஜராத் அணி அதிர்ச்சி தோல்விக்கு பிறகும், டெல்லி அணி த்ரில் வெற்றிக்கு பிறகும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான் அபோட்டியில் கேஎல் ராகுல் 79 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 5000 ரன்களை பூர்த்தி செய்வார். மேற்கொண்டு இந்த போட்டியில் அவர் அதனை செய்தால் ஐபிஎல் தொடர் வரலாற்றுல் அதிவேகமாக 5ஆயிம் ரன்களை கடந்த வீரர் எனும் பெருமையையும் கேஎல் ராகுல் பெறுவார். முன்னதாக டேவிட் வார்னர் 135 இன்னிங்ஸ்களில் ஐந்தாயிரம் ரன்களை கடந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.