
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்களில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கி 88 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 74 ரன்களையும் அடித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளையும், மார்னஸ் லபுஷாகே, நாதன் எல்லிஸ் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 87 ரன்களையும், கேமரூன் கிரீன் 37 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 37.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 193 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் இங்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.