
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முந்தைய தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்குமா அல்லது அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் ஆர்சிபி அணி இப்போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்புமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன்: மெக் லெனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேண்ட், மரிஸான் கேப், ஜெஸ் ஜோனசன், சாரா பிரைஸ், நிகி பிரசாத், ஷிகா பாண்டே, மின்னு மணி, நல்லபுரெட்டி சரணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), டேனியல் வையட்-ஹாட்ஜ், எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ரக்வி பிஸ்ட், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், சினே ராணா, ரேணுகா சிங் தாக்கூர், ஏக்தா பிஷ்ட்