Advertisement

ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான விருதை வென்ற சுப்மன், சோஃபியா டங்க்லி!

ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை சுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனை விருதை சோஃபியா டங்க்லியும் வென்றுள்ளனர்.

Advertisement
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான விருதை வென்ற சுப்மன், சோஃபியா டங்க்லி!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான விருதை வென்ற சுப்மன், சோஃபியா டங்க்லி! (Image Source: Google)
Tamil Editorial
By Tamil Editorial
Aug 12, 2025 • 07:44 PM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. 

Tamil Editorial
By Tamil Editorial
August 12, 2025 • 07:44 PM

இதில் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலில் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் வியான் முல்டர், இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது பெயர்கள் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் வியான் முல்டர் ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முற்சதம் விளாசியதுடன் 367 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதுதவிர்த்து இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ஷுப்மன் கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு ரன்களக் குவித்ததன் காரணமாக அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸும் இந்தியா டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டதுடன் அணியின் வெற்றியிலும் பங்காற்றியதன் காரணமாக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்ப்ட்டுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு ரன்களைக் குவித்ததுடன், தொடர் நாயகன் விருதையும் வென்றதன் காரணமாக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் நான்காவது முறையாக ஷுப்மன் கில் இந்த விருதை வென்று அசத்தியுள்ளார். 

அதேபோல் மகளிருக்கான பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்து வீராங்கனைகல் சோஃபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன் மற்றும் அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் கேபி லூயிஸ் இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் அதிக ரன்களைக் குவித்த இங்கிலாந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார். 

மேலும் மற்றொரு இங்கிலாந்து வீராங்கை சோஃபி எக்லெஸ்டோனும், இந்திய தொடரில் சிறப்பாக செயல்பட்டதுடன் கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகி விருதையும் வென்று அசத்தினார். இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள அயர்லாந்து வீராங்கனை கேபி லூயிஸ் சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மூன்று போட்டிகளில் 154 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

இதில் ஜூலை மாதந்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் சோஃபியா டங்க்லி வென்றுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக சோபியா டங்க்லி முதல் முறையாக ஐசிசி மாதந்திர விருதை வென்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான மிகவும் கடினமான தொடருக்கு பிறகு இந்த ஐசிசி மாதாந்திர வீரர் விருதை வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார். 

 

Also Read: LIVE Cricket Score

 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports