
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளன. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியே வெற்றிபெற்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்று முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிளேயிங் லெவன்: யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), சஜீவன் சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், ஜி கமாலினி, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்
டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் பிளேயிங் லெவன்: மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெஸ் ஜோனசென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேண்ட், மரிஸான் கப், சாரா பிரைஸ், நிகி பிரசாத், மின்னு மணி, ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி சரணி.