
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி இன்று நடைபெறும், தொடரின் 11ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸை வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆஃப்கானிஸ்தான் அணியால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இலங்கை அணி பிளேயிங் லெவன்: பாதும் நிஷங்க, குசால் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, சரித் அசலங்கா(கேப்டன்), தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, துஷ்மந்த சமீர, நுவான் துஷார
ஆப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: செதிகுல்லா அடல், ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், முகமது நபி, தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், கரீம் ஜனத், ரஷித் கான்(கேப்டன்), முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி