
IN-W vs AU-W, 3rd ODI, Cricket Tips: எதிர்வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால், எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IN-W vs AU-W: Match Details
- மோதும் அணிகள்: இந்தியா மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
- இடம்: அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி
- நேரம் - இந்திய நேரப்படி மதியம் 1 மணி
IN-W vs AU-W: Live Streaming Details
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கில் நேரலையில் காண முடியும். ஆன்லைனின் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ - ஹாட்ஸ்டாரில் இந்த தொடரை காண முடியும்,
IN-W vs AU-W: Head-to-Head in ODIs
- Total Matches: 58
- India Women: 11
- Australia Women: 47
- No Result/Tied: 0