
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் யுபி வாரியர்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி, இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியளின் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
யுபி வாரியர்ஸ் மகளிர் பிளேயிங் லெவன்: கிரண் நவ்கிரே, விருந்தா தினேஷ், தீப்தி ஷர்மா(கேப்டன்), தஹ்லியா மெக்ராத், ஸ்வேதா செஹ்ராவத், கிரேஸ் ஹாரிஸ், உமா செத்ரி, சினெல்லே ஹென்றி, சோஃபி எக்லெஸ்டோன், சைமா தாகூர், கிராந்தி கௌட்
மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிளேயிங் லெவன்: யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், சஜீவன் சஜானா, ஜி கமலினி, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், ஜிந்திமணி கலிதா.