
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 19) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்கான ஜிம்பாப்வே அணியில் அறிமுக வீரர் டினோடெண்டா மபோசா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: செதிகுல்லா அடல், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில், ரஷீத் கான், அல்லா கசான்ஃபர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீத் ஜத்ரான்
ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்: தடிவானாஷே மருமணி, பென் கரண், டியான் மியர்ஸ், கிரேக் எர்வின் (கே), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, பிரையன் பென்னட், நியூமன் நியாம்ஹுரி, ரிச்சர்ட் ங்காரவா, டினோடெண்டா மபோசா, ட்ரெவர் குவாண்டு