
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று தொடங்கியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது.
Zimbabwe: பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி, வெஸ்லி மதேவரே, சிக்கந்தர் ராசா(கே), டோனி முனியோங்கா, ரியான் பர்ல், தஷிங்கா முசெகிவா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ந்ங்காரவா, பிளெஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு
Ireland: பால் ஸ்டிர்லிங்(கேப்டன்), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், நீல் ராக், ஜார்ஜ் டாக்ரெல், கரத் டெலானி, கிரஹாம் ஹியூம், கிரெய்க் யங், ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் வைட்