டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Oct 28 2021 20:15 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம்
  • நேரம் - இரவும் 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி, நடப்பு சீசனில் விளையாடிய ஸ்காட்லாந்து அணியுடனான போட்டியில் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

அணியின் பேட்டிங்கில் ஸஸாய், ஷசாத், நஜிபுல்லா ஸத்ரான், ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் தொடர்ந்து அசத்தி வருவது அணிக்கு பலத்தைக் கூட்டியுள்ளது. மேலும் முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான், முகமது நபி ஆகியோர் பந்துவீச்சில் அசத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு சீசனில் இந்தியா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி ஏரத்தாழ அறையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. 

அணியின் பாபர் ஆசாம், ஃபகர் ஸமான், முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் உச்சகட்ட ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ஹசன் அலி, ஹாரிஸ் ராவுஃப், ஷாஹின் அஃப்ரிடி இருப்பது அணிக்கு மேலும் பலத்தைக் கூட்டியுள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 1
  • ஆஃப்கானிஸ்தான் வெற்றி - 0
  • பாகிஸ்தான் வெற்றி - 1

உத்தேச அணி

ஆப்கானிஸ்தான் - ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆஸ்கர் ஆஃப்கான், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி (கே), குல்பாதின் நைப், ரஷித் கான், கரீம் ஜனத், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான்.

பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் (கே), ஃபகர் ஸமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ராவுஃப், ஷஹீன் அஃப்ரிடி.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், முகமது ஷசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ் - ஆசிஃப் அலி, பாபர் ஆசாம், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், நஜிபுல்லா-சத்ரான்
  • ஆல்-ரவுண்டர்கள் - முகமது நபி
  • பந்துவீச்சாளர்கள் - ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அஃப்ரிடி, ரஷித்-கான்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை