ஜோ ரூட்டை பாராட்டிய சரவு கங்குலி!

Updated: Sun, Jun 05 2022 19:23 IST
Image Source: Google

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 132 ரன்களும், இங்கிலாந்து 141 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 285 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 20ஆவது ஓவரில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இங்கிலாந்து தடுமாறியது.

இக்கட்டான சூழலில் இணை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 159 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. அடுத்து வந்த பென் ஃபோக்ஸ் ஜோ ரூட்டிற்குன் உறுதுணையாக விளையாட, இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 120 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்து இங்கிலாந்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

இறுதியில் ரூட் மற்றும் ஃபோக்ஸ் முறையே 115 மற்றும் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டமிழக்காமல் ரூட் சதம் விளாசி அசத்தியதால் இங்கிலாந்து அணி போட்டியை வென்றது. தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்டின் 4 வது நாளில் ஜோ ரூட் தனது சதத்தை விளாசினார். அந்த வேளையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை பதிவு செய்தார். ரூட் இந்த மைல்கல்லை எட்டியவுடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அவரை எல்லா நேரத்திலும் சிறந்தவர் என்று குறிப்பிட்டு பாராட்டினார். ”இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் எவ்வளவு அற்புதமாக விளையாடி உள்ளார் ஜோ ரூட். 

 

அவர் எல்லா காலத்திலும் சிறந்தவர்” என்று கங்குலி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். அலெஸ்டர் குக்கிற்கு பிறகு 10,000 டெஸ்ட் ரன்களை பதிவு செய்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் ரூட் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை