ஐபிஎல் 2022: லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர் நியமனம்?

Updated: Fri, Dec 17 2021 16:16 IST
Image Source: Google

அடுத்த ஆண்டு முதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் ஐபிஎலில் பங்கேற்கவுள்ளது. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. 

இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அகமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் இரண்டு உள்நாட்டு, ஒரு வெளிநாட்டு வீரர்களை தக்கவைக்கலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி, கேப்டன் கே.எல்.ராகுலை தக்கவைக்கவில்லை. ஏலத்தில் பங்கேற்க விரும்புகிறேன் என கூறியதால்தான், அவரை தக்கவைக்கவில்லை என பயிற்சியாளர் அனில் கும்ளே தெரிவித்தார். இந்நிலையில் ராகுல், லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் லெஜண்ட் ஆண்டி ஃபிளவர் லக்னோ அணிக்கு பயிற்சியாளராக செயல்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துணை பயிற்சியாளராக இருக்கிறார். 

இந்நிலையில், அவருக்கு பயிற்சியாளர் பதவி தேடி வந்துள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லக்னோ அணி அடுத்த வாரம் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை