ஆசிய கோப்பை 2022: இலங்கைக்கு பதிலாக யுஏஇ-க்கு மாற்றம்!

Updated: Sun, Jul 17 2022 20:27 IST
Image Source: Google

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினை, மக்கள் போராட்டம், அரசியல் மாற்றங்கள் என்று நெருக்கடியான சூழல் நிலவுவதால் இந்த போட்டி அங்கு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தீவிர முனைப்புடன் இருந்தது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா கூறுகையில்,“எங்களை பொறுத்தவரை இலங்கையில் ஆசிய கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று இன்னும் உறுதியாக நம்புகிறோம். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கு வந்து 2 டெஸ்டில் விளையாடியது.

இப்போது பாகிஸ்தான் அணி வந்துள்ளது. போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக  போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கைக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை