ஆசிய கோப்பை 2025: தொடரில் இருந்து விலகிய நவீன் உல் ஹக்!

Updated: Mon, Sep 15 2025 22:26 IST
Image Source: Google

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

அதன்படி நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்ற உத்வேகத்துடன், வங்கதேச அணி தோல்விக்கு பிறகும் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கின்றன.

இதனால் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆசிய கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் காயம் காரணமாக, இந்த தொடரில் இருந்து விலகுவதாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

முன்னதாக இந்த தொடருக்கு முன் அவர் தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் முதல் போட்டியிலும் அவரால் அணியின் லெவனில் இடம் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் அவரது கயம் குணமடைய மேலும் சில காலம் தேவைப்படும் என்பதால், இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு பதிலாக அப்துல்லா அகமதுசாய், ஆஃப்கானிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

ஆஃப்கானிஸ்தான் அணி: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பதின் நைப், ஷரபுதீன் அஷ்ரஃப், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசன்ஃபர், நூர் அஹ்மத், ஃபரித் மாலிக், அப்துல்லா அகமதுசாய், ஃபசல்ஹக் ஃபாரூக்கி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை