ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தான் vs ஹாங்காக் - உத்தேச லெவன்!

Updated: Fri, Sep 02 2022 11:36 IST
Image Source: Google

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீப காலமாக டி20  கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிலும் பாபர் ஆசாம், ஃபகர் ஸமான், ஆசிஃப் அலி உள்ளிட நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சில் நசீம் ஷா, முகமது நவாஸ், ஹாரிஸ் ராவூஃப் ஆகியோர் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங் அணியும் முதல் முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர்களால் வெற்றிபெற இயலவில்லை.

அணியில் யாசிம் முர்தசா, பாபர் ஹயத், ஐசாஸ் கான் ஆகியோர் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் ஆயூஷ் சுக்லா, முகமது கசன்ஃபர் ஆகியோரும் சிறப்பாக செயல்படுவது அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அதேபோல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் முதல்முறையாக மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

உத்தேச அணி 

பாகிஸ்தான்- பாபர் ஆசாம்(கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஸமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாநவாஸ் தஹானி

ஹாங்காங்– நிஜாகத் கான் (கா), யாசிம் முர்தாசா, பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, அய்சாஸ் கான், ஸ்காட் மெக்கெக்னி, ஜீஷன் அலி, ஹாரூன் அர்ஷாத், எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்ஃபர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை