ஆசிய கோப்பை, இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Mon, Sep 05 2022 22:18 IST
Image Source: Google

ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகள் முன்னேறின. 

இதில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

பொட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றது. ஆனால் நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவியது. 

அதிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தங்களது ஃபார்முக்கு திரும்பியது அணிக்கு கூடுதல் பலமாக இருந்தாலும், பந்துவீச்சில் சற்று சறுக்கலை சந்தித்ததே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

அதானல் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேசமயம் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தானுடன் தோல்வியைத் தழுவினாலும், சூப்பர் 4 சுற்றில் அதற்கு பதிலடியைக் கொடுத்து அசத்தியுள்ளது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் குணத்திலகா, குசால் மெண்டிஸ், அசலங்கா, ராஜபக்ஷா ஆகியோரும், பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோரும் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 25
  • இலங்கை - 7
  • இந்தியா - 17
  • முடிவில்லை - 01

உத்தேச அணி

இலங்கை – தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த ஃபெர்னாண்டோ, தில்சன் மதுஷங்க
   
இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் , தீபக் ஹூடா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ்
  •      பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்
  •      ஆல்ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்கா, ஹர்திக் பாண்டியா
  •      பந்துவீச்சாளர்கள் – புவனேஷ்வர் குமார், மஹீஷ் தீக்ஷனா, சமிகா கருணாரத்னே, ரவி பிஷ்னோய்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை