டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
- இடம் - துபாய் சர்வதேச மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் 1 இல் இடம்பிடித்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன.
அதிலும் இங்கிலாந்து அணி இரண்டு அபார வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது. அந்த அணி பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
குறிப்பாக ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், லியாம் லிவிங்ஸ்டோன் என அதிரடி பேட்டிங் ஆர்டரைக் கொண்டிருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதிலும் குறிப்பாக டேவிட் வார்னர் கடந்த போட்டியில் அரைசதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இரு அணியும் சம பலத்துடன் மோதவிருப்பதால் இப்போட்டியில் வெற்றி பெற்று யார் முதலில் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்வர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள்- 19
- ஆஸ்திரேலியா வெற்றி - 10
- இங்கிலாந்து வெற்றி - 8
- முடிவில்லை - 1
உத்தேச அணி
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் (கே), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஈயான் மோர்கன் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், டைமல் மில்ஸ்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ்
- பேட்டர்ஸ் - ஜேசன் ராய், டேவிட் வார்னர்
- ஆல்-ரவுண்டர்கள் - மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ்
- பந்துவீச்சாளர்கள் - அடில் ரஷித், ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க்.