சச்சினை முந்திய பாபர் ஆசாம்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் பாபர் ஆசாம். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளில் மிக அருமையாக பேட்டிங் ஆடினார் பாபர் ஆசாம். டெஸ்ட் தொடரில் 390 ரன்களை குவித்தார் பாபர் ஆசாம். அந்த தொடரில் ஒரு இன்னிங்ஸில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 196 ஆகும். வெறும் 4 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார் பாபர் அசாம்.
ஒருநாள் கிரிக்கெட்டிலும் அபாரமாக பேட்டிங் ஆடி 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து, பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவரும் பாபர் ஆசாம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடியதன் விளைவாக ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 891 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதன்மூலம், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த வீரர்கள் பட்டியலில் 15ஆவது இடத்தை பிடித்துள்ளார் பாபர் ஆசாம். இதற்கு முன், 887 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்த சச்சின் டெண்டுல்கர் தான் 15ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டை தகர்த்துள்ளார் பாபர் அசாம்.
இந்த பட்டியலில் விவியன் ரிச்சர்ட்ஸ்(935 புள்ளிகளுடன் முதலிடம் வகித்துள்ளார்) முதலிடத்தில் உள்ளார். ஜாகீர் அப்பாஸ்(931) 2ஆம் இடத்திலும், கிரெக் சேப்பல் (921) 3ஆம் இடத்திலும் உள்ளனர். விராட் கோலி இந்த பட்டியலில் (911) ஆறாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.