ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வான், பாபருக்கு இடமில்லை!

Updated: Sun, Aug 17 2025 19:38 IST
Image Source: Google

Pakistan Squad For T20 Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் ஆசிய கோப்பை மற்றும் யுஏஇ முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. சல்மான் ஆகா தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீப காலங்களில் இருவரது ஸ்டிரைக் ரேட் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்சமயம் அவர்கள் ஆசிய கோப்பை தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் மற்ற நட்சத்திர வீரர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், ஃபகர் ஸமான், குஷ்தில் ஷா உள்ளிட்டோருடன் முகமது ஹாரிஸ், சுஃபியான் முகீம், சைம் அயுப், ஹசன் நவாஸ் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் ஓமன் அணியை எதிர்கொள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் மிகப்பெரும் போட்டியாளரான இந்திய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஸமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் சுஃப்யான் முகிம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை