இப்போது வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பது போல் எங்களுக்கு இருக்காது - சௌரவ் கங்குலி!

Updated: Thu, Jul 07 2022 19:39 IST
BCCI President sourav Ganguly Latest interview about his role and responsibilities (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி, தன்னுடைய 50ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் அவருடைய உற்ற நண்பரான சச்சின் டெண்டுல்கரும் பங்கேற்றார். தற்போது இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

தற்போது கங்குலி, சச்சின், தோனி ஆகியோர் இங்கிலாந்தில் விடுமுறையில் உள்ளனர். இந்த நிலையில், தனியார் பத்திரிக்கைக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “பிசிசிஐயில் தாம் தலைவராக இருந்த 3 வருடம் பொற்காலமாக இருந்தது. இதில் இரண்டு ஆண்கள் கோவிட் காலம் வேறு. கிரிக்கெட், பிசிசிஐ பொருளாதாரம் என அனைத்திலும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். என் பதவிக்காலத்தில் எந்த சர்ச்சையும் நடைபெறவில்லை. ஐபிஎல் மூலம் பிசிசிஐ பெரிய பொருளாதார உச்சத்தை பெற்றுள்ளது. தற்போது ஐபிஎல் மூலம் 48 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இன்னும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தொலைக்காட்சி உரிமையை விற்க உள்ளோம். அதன் மூலம் மொத்தமாக 70 ஆயிரம் கோடி ருபாய் வரை கிடைக்கும். டி20 போட்டிக்காக டெஸ்ட் போட்டியை அழிக்கிறோம் என்ற குற்றச்சாட்டை ஏற்க மாட்டோம். இந்தியா, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் எல்லாம் டெஸ்ட் போட்டிக்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 74 போட்டிகள் நடைபெறும். பிற்காலத்தில் தான் போட்டிகளை அதிகரிக்க உள்ளோம். ஐபிஎல் தொடருக்காக ஐசிசியிடம் தனி கால அவகாசம் கேட்டுள்ளோம். இது குறித்து பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தால் அதனை அப்போது பார்த்து கொள்வோம். கோவிட் காலங்களால் விளையாட முடியாத தொடர்கள் எல்லாம் தற்போது நடைபெறுகிறது. இதனால் தான் இரண்டு அணிகள் களமிறங்குகிறது.

நிலைமை சரியான பிறகு, சிறந்த அணி மட்டுமே கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும். கிரேக் சேப்பல் என்னை அணியை விட்டு நீக்கும் போது சர்வதேச ஒருநாள் தரவரிசையில் தாம் 4ஆவது இடத்தில் இருந்தேன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா, அதற்கு முன் தொடர்ந்து 13 ஆண்டுகளில் விளையாடினேன். 6 காலம் விளையாடாத போது ஏமாற்றமாக இருந்தது. இப்போது வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பது போல் எங்களுக்கு இருக்காது. அணிக்கு மீண்டு வர கடுமையாக உழைத்தேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை