ஐபிஎல் 2022: அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ அலோசனை!

Updated: Fri, Jan 21 2022 22:10 IST
Image Source: Google

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கரோனா பாதிப்புக்கு இடையே நடந்து முடிந்ததால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எந்த இடையூறும் இல்லாமல் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கான விரிவான முன்னேற்பாடுகளை செய்யும் விதமாக அனைத்து காரணிகளையும் அலசி ஆராய்ந்து வருகிறது. 

இந்தியாவில் நடத்தலாம் என்றால், கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால், இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.

அப்படி நடத்தப்பட்டாலும், மும்பை உள்ளிட்ட ஒரு சில மைதானங்களில் மட்டுமே அனைத்து போட்டிகளையும் நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் வெளிநாடுகளில் நடத்தும் பிளான் பி திட்டமும் பிசிசிஐயிடம் உள்ளது. 

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தமுறை இலங்கை அல்லது தென்னாப்பிரிக்காவில் நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் தொடரை நடத்துவது என்றால் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு சிக்கல் எழும் என்பது மற்றொரு பிரச்சனையாக இருக்கிறது. அதனால், எங்கு போட்டியை நடத்தலாம்? எந்த தேதிகளில் நடத்தலாம்? என்பது குறித்து அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ நாளை கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

அணி உரிமையாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கள சூழலையும் கருத்தில் கொண்டு பிசிசிஐ இறுதி முடிவை எடுக்க உள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்துக்குப் பிறகு ஐபிஎல் திடரின் 15ஆவது சீசன் எங்கு நடைபெறும்? எந்த தேதியில் நடைபெறும்? என்ற விவரங்கள் ஓரளவுக்கு தெரிந்துவிடும் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஏலம் நடைபெறும் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை