ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Oct 14 2021 15:15 IST
Cricketnmore

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதில் நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் யார் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற காத்திருகிறது. அதிலும் நடப்பு சீசனில் ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியாக விளையாடி வருவது அணியின் வெற்றி வாய்ப்புக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. 

மேலும் அவர்களுடன் ராபின் உத்தப்பா, மகேந்திர சிங் தோனியும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளதால் நிச்சயம் நடப்பு சீசனில் சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சில் டுவைன் பிராவோ, ஹசில்வுட், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சிறப்பாக செயல்படுவதால் அணியின் வெற்றி வாய்ப்பும் அதிகரித்துள்ளது. 

ஈயான் மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் இதுவரை கேகேஆர் அணி விளையாடிய இறுதிப் போட்டியில் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவியதில்லை. 

அதேசமயம் நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுத்தந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அணியின் தொடக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் தான். 

பந்துவீச்சில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி என இரு மாயாஜால சுழற்பந்துவீச்சாளர்களுடன் லோக்கி ஃபர்குசனும் உள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் கேகேஆர் வெற்றிபெரும் என்றே ரசிகர்கள் கருதுகின்றன. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 25
  • சென்னை வெற்றி - 16
  • கொல்கத்தா வெற்றி - 8
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஈயான் மோர்கன் (கே), தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், ஷாகிப் அல் ஹசன், லோக்கி ஃபர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக்
  • பேட்டர்ஸ் - ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, சுப்மான் கில்
  • ஆல் -ரவுண்டர்கள் - டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர்
  • பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை