ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய டூ பிளெசிஸ்!

Updated: Sun, Apr 17 2022 12:45 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 66* ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 55 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

இந்தநிலையில், டெல்லி அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் குறித்து டூ பிளெசிஸ் பேசுகையில், “பேட்டிங்கில் நாங்கள் 190 ரன்கள் எடுத்ததற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் சபாஷ் அகமதின் பொறுப்பான பேட்டிங்கே காரணம். தினேஷ் கார்த்திக் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தொடரில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தினேஷ் கார்த்திக் எங்களுடன் இருப்பது எங்கள் அதிர்ஷ்டம்.

பேட்டிங்கில் துவக்க வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்யாத போதிலும், மேக்ஸ்வெல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தத்தை குறைத்ததோடு, எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார். 

அதே போல் நாங்கள் 190 ரன்கள் வரை எடுத்ததற்கு முக்கிய காரணமான சபாஷ் அஹமத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமானவர்கள். பந்துவீச்சாளர்கள் சில போட்டிகளில் சொதப்பினாலும் அவர்கள் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம், அவர்கள் மீதான எங்கள் நம்பிக்கைக்கு இந்த போட்டியில் பலன் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை