MLC 2025 Challenger: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான சேலஞ்சர் சுற்று போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றதுடன் நடப்பு சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ஸ்மித் படேல் 9 ரன்களுக்கும், சாய்ஜேதா முக்காமல்லா ஒரு ரன்னிலும், ஷுப்மன் ரஞ்சனே ஒரு ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் அரைசதம் கடந்திருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 59 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 85 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த அகீல் ஹொசைன் மற்றும் டோனவன் ஃபெரீரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அகீல் ஹொசைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகீல் ஹொசைன் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 55 ரன்களையும், டோனவன் ஃபெரீரா 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் தரப்பில் டிரிஸ்டன் லூஸ் 3 விக்கெட்டுகளையும், ருஷில் உகர்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் குயின்டன் டி காக் 6 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் 8 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மொனாங்க் படேல் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொனாங்க் படேல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 49 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் நிக்கோலாஸ் பூரனுடன் ஜோடி சேர்ந்த கீரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிகோலஸ் பூரன் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களையும், கீரன் பொல்லார்ட் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News