ENG vs PAK, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் அனுபவமில்லாத இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் இழந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை (ஜூலை 16) நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிஜ் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs பாகிஸ்தான்
- நேரம் - இரவு 11 மணி
- இடம் - ட்ரெண்ட்பிரிஜ், நாட்டிங்ஹாம்
போட்டி முன்னோட்டம்
இங்கிலாந்து
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அனுபமில்லாத இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
இந்நிலையில் கரோனா தனிமைப்படுத்துதலிருந்து மீண்டுள்ள ஈயன் மோர்கன் மீண்டும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய் ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், மொயீன் அலி ஆகியோரும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளது அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தியுள்ளது.
அதேபோல் ஒருநாள் தொடரில் அசத்திய சாகிப் மஹ்மூத், லீவிஸ் கிரிகோரி ஆகியோருடன் கிறிஸ் ஜோர்டன், டாம் கரண் ஆகியோரும் இணைந்திருப்பதால் பந்து வீச்சு வரிசை எதிரணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தான்
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் ஆன நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு நாளைய போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது ரிஸ்வான், அசாம் கான், ஃபகர் ஸமான், முகமது ஹபீஸ் என அதிரடி பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் பந்துவீச்சில் ஹசன் அலி, உஸ்மான் காதிர், ஷாஹீன் அஃப்ரிடி உள்ளிட்டோரும் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசினால் பாகிஸ்தான் அணியின் வெற்றி உறுதியாகும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 18
- பாகிஸ்தான் வெற்றி - 5
- இங்கிலாந்து வெற்றி - 12
- முடிவில்லை - 1
உத்தேச அணி
இங்கிலாந்து - ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஈயோன் மோர்கன் (கே), ஜோஸ் பட்லர், மொயீன் அலி, லூயிஸ் கிரிகோரி, சாகிப் மஹ்மூத், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், ஆதில் ரஷீத்.
பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கே), ஷர்ஜீல் கான், ஃபகர் ஸமான், முகமது ஹபீஸ், அசாம் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, உஸ்மான் காதிர், ஹரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன் / ஷாஹீன் அஃப்ரிடி.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர்
- பேட்ஸ்மேன்கள் - பாபர் அசாம், அசாம் கான், டேவிட் மாலன்
- ஆல்ரவுண்டர்கள் - லூயிஸ் கிரிகோரி, மொயீன் அலி
- பந்து வீச்சாளர்கள் - ஹசன் அலி, சாகிப் மஹ்மூத், ஆதில் ரஷீத்.