இலங்கை, முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பக்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்ததிருந்தது இன்று அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான இலங்கை அணியில் மதிஷா பதிரானா நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை ஒருநாள் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் ஹசன் நவாஸ் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஹசன் நவாஸ் பங்கேற்க இருப்பதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் ஆகா தொடரும் நிலையில், ஃபகர் ஸமானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் டி20 அணியில் பாபர் ஆசாம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் கான் உள்ளிட்டோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். இதுதவிர்த்து மற்ற வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
பாகிஸ்தான் ஒருநாள் அணி: ஷஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபைசல் அக்ரம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, ஹுசைன் தலாத், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா
பாகிஸ்தான் டி20 அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்
இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்க, லஹிரு உதார, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரநாக, மஹேஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வன்டர்சே, துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், ஈஷான் மலிங்க
Also Read: LIVE Cricket Score
இலங்கை டி20 அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமில் மிஷார, தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மகேஸ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, அசித்த ஃபெர்னாண்டோ, ஈஷான் மலிங்க